6 ஆம் வகுப்பு தமிழ் இயல் ஒன்று.
1. தமிழுக்கும் அமுதென்றுபேர்-அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! என்று பாடியவர் யார்?
அ)பாரதியார். ஆ)பாரதிதாசன்
இ)கவிமணி ஈ)முடியரசன்
2. பொதுவுடமை,பகுத்தறிவு போன்ற கருத்துக்களை உள்ளடக்கி பாடல் எழுதியவர் யார்
அ)பாரதியார். ஆ)பாரதிதாசன்
இ)கவிமணி. ஈ)முடியரசன்
3.பொருத்துக
அ. தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு. – 1. ஊர்
ஆ. தமிழ் எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட – 2 நீர்
இ. தமிழ் நல்ல புகழ்மிக்க புலவருக்கு. – 3 தேன்
ஈ. தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் -4 வேல்
உ. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க - 5 வாள்
அ) 2,4,3,1,5 ஆ) 2,1,3,5,4
இ) 2,1,4,3,5 ஈ) 2,1,4,5,3
4. புரட்சிக்கவி,பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்
அ)பாரதியார். ஆ)பாரதிதாசன்.
இ) கவிமணி. ஈ)முடியரசன்
5. தமிழுக்கும் தனக்குமான உறவை தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு போன்றது என்று கூறிய புலவர் யார்
அ)பாரதியார். ஆ)பாரதிதாசன்.
இ)காசி ஆனந்தன். ஈ)முடியரசன்
6.ஏற்றத் தாழ்வற்ற----------- அமைய வேண்டும்
அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு
7.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு------------- ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி. ஆ) கோபம்.
இ) வருத்தம். ஈ) அசதி
8) நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
அ) நிலயென்று. ஆ) நிலவென்று.
இ) நிலவன்று. ஈ) நிலவுஎன்று
9) தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
அ) தமிழங்கள். ஆ) தமிழெங்கள்.
இ) தமிழுங்கள். ஈ) தமிழ்எங்கள்
10. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
அ) அமுது + தென்று. ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று. ஈ) அமு + தென்று
11. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
அ) செம்மை + பயிர்.ஆ) செம் + பயிர்.
இ) செமை + பயி. ஈ) செம்பு + பயிர்
12.பொருத்துக
அ) விளைவுக்கு. – 1 பால்
ஆ) அறிவுக்கு. – 2 வேல்
இ) இளமைக்கு. – 3 நீர்
ஈ) புலவர்க்கு. – 4 தோள்
ஆ) 3 4 1 2. ஆ) 1 2 3 4
இ) 3 4 2 1. ஈ) 2 1 3 4
13)”தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” என்று பாடியபுலவர் யார்?
அ)பாரதியார். ஆ)பாரதிதாசன்.
இ)காசி ஆனந்தன். ஈ)முடியரசன்
14. தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் இதில் நிருமித்த என்பதின் பொருள்?
அ) உருவாக்கிய. ஆ) நிலைத்த.
இ) உருதியான. ஈ) பழமையான
15. “ அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்” என்று பாடிய புலவர் யார்
அ)பாரதியார். ஆ)பாரதிதாசன்.
இ)காசி ஆனந்தன். ஈ)முடியரசன்
ConversionConversion EmoticonEmoticon